பொது செய்தி

தமிழ்நாடு

நலவாரியத்துக்கு 'உயிர்'; பூஜாரிகள் பேரமைப்பு மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கோவில்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். வயதான பூஜாரிகளுக்கு, ஓய்வூதிய உதவியும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.கோவில்களுக்கு விதிக்கப்பட்ட 2சி(1) மின் கட்டண உத்தரவை ரத்து செய்ய

திருப்பூர்:ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கோவில்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். வயதான பூஜாரிகளுக்கு, ஓய்வூதிய உதவியும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.கோவில்களுக்கு விதிக்கப்பட்ட 2சி(1) மின் கட்டண உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.வருவாய் இல்லாத கோவில்களுக்கு, இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பூஜாரிகள் நலவாரியம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கிராம பூஜாரிகளுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. எனவே, பூஜாரிகள் நலவாரியத்தை உயர்பெறச்செய்து, புதிய உறுப்பினர்களை சேர்த்து, முறையாக நடத்த வேண்டும். சிறிய கோவில்களுக்கு, அரசே பூஜை பொருட்களை வழங்க வேண்டும்.பெரிய கோவில்களுக்கு வரும் பசுக்களை, கிராம கோவில்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X