பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் ஆய்வு எதிரொலி 4 சார்-பதிவாளர் 'டிரான்ஸ்பர்': பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பதிவுத்துறையில் அமைச்சர் ஆய்வின் எதிரொலியாக, நான்கு சார்-பதிவாளர்கள் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டுள்ளனர்.கோவை பத்திரப்பதிவு மண்டலத்தில், 14 சார்-பதிவாளர்கள் அயல் பணி என்ற அடிப்படையில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு டி.ஐ.ஜி., சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு பேர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பதிவுத்துறையில் அமைச்சர் ஆய்வின் எதிரொலியாக, நான்கு சார்-பதிவாளர்கள் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டுள்ளனர்.கோவை பத்திரப்பதிவு மண்டலத்தில், 14 சார்-பதிவாளர்கள் அயல் பணி என்ற அடிப்படையில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு டி.ஐ.ஜி., சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு பேர் இடமாற்றப்பட்டனர்.அவ்வகையில், அவிநாசி சார்-பதிவாளர் (நிலை-1) ரகோத்மன், கோவை பதிவு மாவட்டம், சீட்டு மற்றும் சங்கம் சார்-பதிவாளராகவும், மதுக்கரை சார்-பதிவாளர் இளங்கோ, அவிநாசி சார்-பதிவாளராக இடமாற்றப்பட்டார்.அவிநாசி சார்-பதிவாளர் (நிலை-2) உதயசங்கர், திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கிணத்துக்கடவில் பணியாற்றிய வெங்கிடுசாமி, இடமாற்றப்பட்டார்.திருப்பூர் ஜாயின்ட்-1, சார்-பதிவாளர் கனகராஜ், கோவை துணை பதிவு துறை அலுவலகத்துக்கும் (புலனாய்வு), தொட்டிபாளையம் சார்-பதிவாளர் உமா மகேஸ்வரி, ஊட்டி பதிவு மாவட்டம் (வழிகாட்டி) சார்-பதிவாளராகவும் மாற்றப்பட்டார்.திருப்பூர் மற்றும் அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில், கடந்த வாரம் அமைச்சர் மூர்த்தியின் ஆய்வை தொடர்ந்துநான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டது பதிவுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும், பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், பல அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X