பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் மையத்தில், 'சர்வர்' கோளாறு; காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் ஆதார் மையத்தில், 'சர்வர்' கோளாறு; மக்கள் அவதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 'இ-சேவை' மையம், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர்வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம், 'இ-சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன. 'இ-சேவை' மையம் மற்றும் கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில்,ஆதார் மையங்களும் இயங்குகின்றன.நீண்ட இடைவெளிக்கு பின், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 'இ-சேவை' மையம், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர்வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம், 'இ-சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன. 'இ-சேவை' மையம் மற்றும் கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில்,ஆதார் மையங்களும் இயங்குகின்றன.நீண்ட இடைவெளிக்கு பின், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிய ஆதார் மையங்கள், கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. அவசர தேவைகளுக்காக, ஆதார்திருத்தம் மற்றும் பதிவுக்காக சென்ற மக்கள், ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து ஆதார் மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கேபிள் 'டிவி'நிறுவன ஆதார் மையத்தில், 'சர்வர் அப்டேட்' பணி நடந்து கொண்டிருந்தது. விரைவில், ஆதார் பணி வழக்கம் போல் துவங்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X