பொது செய்தி

தமிழ்நாடு

துணி ரோல் கொண்டு செல்ல மாட்டுவண்டி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் சில குறு, சிறு நிறுவனங்கள், பனியன் ரோல், ஆடைகளை ஏற்றிச்செல்ல, மாட்டு வண்டிகளை பயன்படுத்த துவங்கிவிட்டன.பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்கின்றன. தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல், 102 முதல் 103, டீசல் 95 ரூபாயாக உச்சத்தை தொட்டு விட்டது. இதனால், சரக்கு வாகன கட்டணங்களும் உயர துவங்கி விட்டன.அடுத்த தெருவில் உள்ள கடைக்கு செல்வதற்கு கூட டூவீலரை
 துணி ரோல் கொண்டு செல்ல மாட்டுவண்டி

திருப்பூர்:திருப்பூரில் சில குறு, சிறு நிறுவனங்கள், பனியன் ரோல், ஆடைகளை ஏற்றிச்செல்ல, மாட்டு வண்டிகளை பயன்படுத்த துவங்கிவிட்டன.பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்கின்றன. தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல், 102 முதல் 103, டீசல் 95 ரூபாயாக உச்சத்தை தொட்டு விட்டது. இதனால், சரக்கு வாகன கட்டணங்களும் உயர துவங்கி விட்டன.அடுத்த தெருவில் உள்ள கடைக்கு செல்வதற்கு கூட டூவீலரை முறுக்கியவர்களும் கூட, இப்போது, நாலு எட்டு நடந்து சென்றால் காசு மிச்சமாகும்; உடலும் 'பிட்' ஆகும் என்கிற மனநிலை மாற்றமடைந்துவிட்டனர். இன்னும் சிலரோ, சைக்கிள் வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர்.திருப்பூரில் உள்ள குறு, சிறு நிறுவனங்கள், பனியன் துணி, ஆயத்த ஆடை கட்டுக்களை கொண்டுசெல்வதற்கு, இருசக்கர வாகனம், ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். எரிபொருள் விலை உயர்வால், சரக்கு கொண்டுசெல்வதற்கான செலவினங்கள் எகிறிவிட்டன.குறிப்பிட்ட அளவுக்குமேல் ஆடை விலையை உயர்த்த முடியாது என்ப தால், செலவினங்களுக்கு கடிவாளம் போடவேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக, நிதி நிலை குறைந்த, குறு, சிறு நிறுவனங்கள், எப்போதும் சிக்கனம் கடைபிடிப்பது அவசியமாகிறது.இதனால், சில குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், டூவீலர், சரக்கு ஆட்டோவுக்கு பதிலாக, மாட்டுவண்டிகளை வாடகைக்கு அமர்த்த துவங்கிவிட்டன. ஏறத்தாழ, 15 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் நகர வீதிகளில், ஏராளமான மாட்டு வண்டிகள் வலம் வந்தன.சரக்கு ஆட்டோக்கள் வந்தபின், மாட்டுவண்டிகளை காண்பதே அரிதாகிவிட்டது. சில இடங்களில், குடிநீர், உணவு பொருட்கள் ஏற்றிச்செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.பின்னலாடை உற்பத்தியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளால், தற்போது பனியன் துணி, ஆடை ஏற்றிச்செல்லும் ஒற்றை மாட்டு வண்டிகளையும் பரவலாக காணமுடிகிறது.மகிழ்ச்சி அளிக்கிறது

திருப்பூரை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர் தண்டபாணி கூறியதாவது:பக்கத்திலுள்ள பகுதிகளுக்கு சரக்குகளை, மாண்டுவண்டியில் கொண்டு செல்ல, குறைந்தபட்ச கட்டணம் 30 முதல் 45 ரூபாய் வாங்குகிறோம். புது பஸ் ஸ்டாண்ட் முதல், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, இரும்பு கம்பிகள் உட்பட சரக்குகளை கொண்டுசெல்வதற்கே, 150 முதல் 200 ரூபாய் தான் கட்டணம்.இதனாலேயே, சிறிய நிறுவனத்தினர், குறைந்த செலவில் ஆடை, துணி ரகங்களை கொண்டு செல்ல, மாட்டுவண்டிகளை நாடத்து வங்கியுள்ளனர். இது, என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X