பொது செய்தி

தமிழ்நாடு

அச்சுறுத்தும் தொற்று பயம்; அரசு பஸ்சில் மக்கள் 'மாயம்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:அரசு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், திருப்பூர் மண்டலத்தில் வருவாய் சரிந்துள்ளது.கொரோனா ஊரடங்குக்கு பின், 5ம் தேதி முதல் பஸ் இயக்கத்துக்கு அரசு அனுமதி அளித்தது. திருப்பூர் மண்டலத்தில், 90 சதவீத வெளியூர் மற்றும் 70 சதவீத டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.இலவச பயணம் என்பதால், ஆண் பயணிகளை விட, பெண் பயணிகள் அதிகளவில் டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர். அதே நேரம்,

திருப்பூர்:அரசு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், திருப்பூர் மண்டலத்தில் வருவாய் சரிந்துள்ளது.கொரோனா ஊரடங்குக்கு பின், 5ம் தேதி முதல் பஸ் இயக்கத்துக்கு அரசு அனுமதி அளித்தது. திருப்பூர் மண்டலத்தில், 90 சதவீத வெளியூர் மற்றும் 70 சதவீத டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.இலவச பயணம் என்பதால், ஆண் பயணிகளை விட, பெண் பயணிகள் அதிகளவில் டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர். அதே நேரம், மாற்றுத்திறனாளிகள், உடன் வருவோர், திருநங்கை எண்ணிக்கை குறைவு தான்.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் இயக்கத்துக்கு பின் பயணிகள் முககவசம் அணிந்து பயணிக்க வருகின்றனர். ஆனால், இயல்பு திரும்பி விடவில்லை. 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், 'பீக்ஹவர்ஸில்' கலெக் ஷன் ஆகிறது. மற்ற நேரங்களில் கூட்டமில்லை. இரவு, அதிகாலையில் பயணிகள் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது,' என்றனர்.மாவட்டத்தில் தனியார் பஸ் இயக்கம் முழு அளவில் துவங்கவில்லை. 30 சதவீதம் மட்டுமே இயங்குகிறது. கடந்த, 5ம் தேதி முதல், 15ம் தேதி வரை திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 563 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில், 18 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இவர்களில், பத்து லட்சம் பேர் பெண்கள்; எட்டு லட்சம் பேர் ஆண்கள்.ரூ.39 லட்சம் மட்டுமே!கடந்த இரு வாரங்களாக பஸ்கள் இயங்கிய போதும், கலெக் ஷன் முன் போல் இல்லை. தினமும் பத்து லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் திருப்பூர் பணிமனை-1ல், ஐந்து லட்சம் ரூபாய், பணிமனை-2ல், ஏழு லட்சத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகிறது.பழநி - 1 மற்றும் 2, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலையை உள்ளடக்கிய திருப்பூர் மண்டலம் நாள் ஒன்றுக்கு, 80 லட்சம் ரூபாய் வருவாய் (2019) ஈட்டும். தற்போது, ஐம்பது சதவீதம் வருவாய் குறைந்து, 39 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதனால், போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X