ஒரு ரூமை புதுப்பிக்க ரூ.18 லட்சம் 'கணக்கு' : 'மாஜி'யின் கூட்டம் கண்காணிப்புல இருக்கு!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பணி நிமித்தமாக, ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள பத்திரப் பதிவு ஆபீசுக்கு சித்ரா, மித்ரா வந்திருந்தனர்.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நம்மூர்ல ஆய்வு செஞ்சாரே.... ரொம்பவே சூடா இருந்தாராமே,''''ஆமாப்பா, இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு விசுவாசமா செயல்படுறது யார் யாருன்னு ஏற்கனவே 'லிஸ்ட்' எடுத்து வச்சிருக்காராம். அதனால, 'ஸ்கெட்ச்' போட்டு,
 ஒரு ரூமை புதுப்பிக்க ரூ.18 லட்சம் 'கணக்கு' : 'மாஜி'யின் கூட்டம் கண்காணிப்புல இருக்கு!

பணி நிமித்தமாக, ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள பத்திரப் பதிவு ஆபீசுக்கு சித்ரா, மித்ரா வந்திருந்தனர்.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நம்மூர்ல ஆய்வு செஞ்சாரே.... ரொம்பவே சூடா இருந்தாராமே,''

''ஆமாப்பா, இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு விசுவாசமா செயல்படுறது யார் யாருன்னு ஏற்கனவே 'லிஸ்ட்' எடுத்து வச்சிருக்காராம். அதனால, 'ஸ்கெட்ச்' போட்டு, ஒவ்வொரு ஆபீசா ஆய்வுக்கு போயிருக்காரு. பெரியநாயக்கன்பாளையம் ஆபீசுக்குள்ள ஏகப்பட்ட கூட்டம் இருந்ததை பார்த்ததும், கொரோனா தொற்று சமயத்துல, எதுக்கு இவ்ளோ கூட்டத்தை திரட்டி வச்சிருக்கீங்கன்னு சொல்லி, 'சஸ்பெண்ட்' செய்யச் சொல்லி, உத்தரவு போட்டாராம்,''

''அக்கா, இந்த விவகாரத்துல, எனக்கொரு தகவல் தெரியும். நடவடிக்கைக்கு உள்ளானவரு, இலைக்கட்சி அனுதாபியாம். ஆட்சிக்கு தி.மு.க., வந்த பிறகும், அ.தி.மு.க.,வுக்கே விசுவாசமா இருந்தாராம்,''

''மினிஸ்டர் ஆய்வுக்கு வந்துட்டு போனதும், நம்ம மண்டலத்துல மட்டும், 14 சார்பதிவாளர்களை, வெவ்வேறு இடத்துக்கு மாத்தியிருக்காங்களாம். இதுல, தொண்டாமுத்துார்ல இருந்தவரை மதுக்கரைக்கும், மதுக்கரை, கிணத்துக்கடவில் பணிபுரிஞ்சவங்களை அவிநாசிக்கும், சொசைட்டியை கவனித்துக் கொண்டிருந்தவரை, கிணத்துக்கடவுக்கும் மாத்தியிருக்காங்க. தொண்டாமுத்துாருக்கு இன்னும் யாரையும் நியமிக்கலையாம். இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கம் இல்லாதவங்களை தேடுறாங்களாம்,''

''முக்கியப் புள்ளி யாரையோ விசாரிக்கிறாங்களாமே,''

''அதுவா, இலைக்கட்சி வி.ஐ.பி., உறவினர்கள், சொந்தங்கள்ன்னு யாரெல்லாம் இருக்காங்கன்னு போலீசுல, 'லிஸ்ட்' போட்டிருக்காங்க. எங்கெங்கெல்லாம் யாரு பெயரில் சொத்து இருக்குன்னு விசாரிச்சிருக்காங்களாம். ஒவ்வொருத்தரையும் ரொம்பவும் 'க்ளோசா' கண்காணிக்க உத்தரவிட்டு இருக்காங்களாம். ஒருத்தர் கூட, வெளிநாட்டுக்கு தப்பிடக்கூடாதுன்னு, 'ஸ்டிரிக்ட்டா' ஆர்டர் போட்டிருக்காங்களாம். நடிகை பெயரில் அழைக்கப்படுற ஒரு உதவியாளரிடம், ஒரு தடவை விசாரிச்சிருக்காங்களாம்,''

''அப்படியா,'' என ஆச்சரியப்பட்ட சித்ரா, பேசிக்கொண்டே, போலீஸ் கேன்டீனுக்குள் நுழைந்தாள்.உருளைக்கிழங்கு போண்டா எடுத்து ருசித்த மித்ரா, ''ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க ரோந்து போறாங்களான்னே தெரியலையே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''மித்து, சாயங்காலம் ஆச்சுன்னா, ரேஸ்கோர்ஸ்ல, 'நான்-வெஜ்'க்கு பிரபலமான ஐந்தெழுத்து ஓட்டலுக்கு முன்னாடி, ஏகப்பட்ட கார் வரிசைகட்டி நிக்குது. காருக்குள்ள உக்கார்ந்து, மது குடிக்கிறாங்க. காலி பாட்டில மரத்தடியில போடுறாங்க,''

''இந்த வழியா தான், கலெக்டர் சமீரன் தினமும் முகாம் அலுவலகத்துக்கு போறாரு. போலீஸ் கமிஷனர், ஐ.ஜி.,ன்னு உயரதிகாரிகள் பலரும், இதே பகுதியில தான் வசிக்கிறாங்க. போலீஸ்காரங்களும் ஓட்டல் மாமூல் மட்டும் வசூலிச்சிட்டு போயிடுறாங்களாம். இந்த வழியா போற, லேடீஸ் ரொம்பவே பயத்துல இருக்காங்களாம்,''

''அக்கா, இதே மாதிரி, தண்ணீர் பந்தல் ரோட்டுல, பஞ்சு குடோன் பக்கத்துல இருக்குற, 'டாஸ்மாக்' கடையில, அனுமதி இல்லாம, 'பார்' நடத்துறாங்களாம்; ஞாயித்துக்கிழமை வெட்டாட்டம் நடக்குதாம்.கடந்த ஆட்சியில ஏகப்பட்ட பார்களை எடுத்து, கோலோச்சிக்கிட்டு இருந்தவரே, இந்த ஆட்சியிலும் 'கவனிக்க' வேண்டியவங்களை சரிக்கட்டிட்டு, இல்லீகல் பிசினசை தொடர்ந்து செய்றாராம்,'' என்றபடி, லெமன் டீ ஆர்டர் சொன்னாள் மித்ரா.

''அதெல்லாம் இருக்கட்டும். புதுசா ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சடிச்சு வந்திருந்தாலும், மக்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறாங்களாமே,''

''ஆமாக்கா, நம்மூருக்கு உணவுத்துறை அமைச்சரை தான், பொறுப்பாளரா நியமிச்சிருக்காங்க. ஆனா, அந்த துறையில தான் ஏகப்பட்ட பிரச்னை ஓடிட்டு இருக்குதாம்,''

''வடக்கு தாலுகா ஆபீசுல இருக்குற செக்சனுக்கு போயி, புது ரேஷன் கார்டு கேட்டா, 'உங்களது மொபைல் போன் எண்ணுக்கு அழைப்போம்'ன்னு சொல்லி, திருப்பி அனுப்புறாங்களாம்; ஆனா, யாருமே கூப்பிடுறதில்லையாம். புரோக்கர் மூலமா லஞ்சம் கொடுத்தா, உடனே கெடைக்குதாம். ஒரு கார்டுக்கு அஞ்சாயிரம் ரூபாய் கேட்குறாங்களாம். ஜனங்க புலம்பிட்டு இருக்காங்க,

''லெமன் டீயை உறிஞ்சிய படி, ''கொஞ்ச நாளா, ரேஷன் அரிசி கடத்தலும் அதிகமாயிட்டதா, சொல்றாங்களே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமா, மித்து! நீ சொல்றது உண்மைதான்! மத்திய அரசு ஒதுக்கீடா, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா, 5 கிலோ அரிசி, நவ., மாசம் வரை கூடுதலா கொடுக்கச் சொல்லி, உத்தரவு போட்டிருக்காங்க,''

''ஒவ்வொரு குடும்பத்துக்கும், 40 கிலோ வரைக்கும் அரிசி கொடுக்க வேண்டியிருக்கு. சிறிய குடும்பத்துக்கு அவ்ளோ அரிசி தேவைப்படாததால, பெரும்பாலானவங்க வாங்குறதில்லையாம். ரேஷன் கடைக்காரங்க, 'நோட்' பண்ணி வச்சு, மாசக்கடைசியில வாங்குனதா கணக்கு காட்டி, மொத்தமா வித்துடுறாங்களாம்,''

''இதுல, ரேஷன் அரிசியை ஆளாளுக்கு கடத்தக் கூடாதுன்னு, ஆர்டர் போட்டிருக்காங்களாம். சூரியக்கட்சியை சேர்ந்த நான்கு பிரமுகர்கள், மொத்தமா 'கலெக்ட்' பண்ணி, மில்லுக்கு கொண்டு போறாங்களாம். பாலீஷ் பண்ணி, மூட்டையா 'பேக்' பண்ணி, விற்பனைக்கு அனுப்புறாங்களாம். இந்த வேலையை யாரெல்லாம் செய்றாங்கன்னு, உளவுத்துறைக்காரங்க விசாரிச்சுக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, கேன்டீனில் இருந்து வெளியே வந்தாள் சித்ரா.

பின்தொடர்ந்து வந்த மித்ரா, ''சொத்து வரி கட்டணும்; கார்ப்பரேஷன் ஆபீசுக்கு போகலாமா,'' என கேட்டபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

''மித்து, ஒரே திட்டத்துக்கு ரெண்டு தடவை பூஜை போட்டாங்களாமே,''

''ஆமாக்கா, பில்லுார் 3வது ஸ்கீம்ல, மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பக்கத்துல, 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டுறதுக்கு, பூமி பூஜை போட்டாங்க. 7:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில, தி.மு.க.,காரங்க கலந்துக்கிட்டாங்களாம்; 10:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில, 'மாஜி' அமைச்சர் வேலுமணி தலைமையில, நாலு எம்.எல்.ஏ.,க்கள் கலந்துக்கிட்டாங்களாம்,''

''யாரையாவது புறக்கணிச்சா சிக்கலாயிடும்கிற பயத்துல, ரெண்டு நிகழ்ச்சியிலும் அதிகாரிகள் பங்கெடுத்தாங்களாம்,'' என்ற மித்ரா, கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன் ஆபீசில், ஆதார் அப்டேட் செய்றதுக்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து, ''என்னக்கா, இவ்ளோ பேர் காத்துக்கிட்டு இருக்காங்க. கவர்மென்ட் ஆபீசுக்கு வந்தா, நோகடிச்சிடுவாங்க போலிருக்கே,'' என, நொந்து கொண்டாள்.

''மித்து, இந்த ஜோன்ல பரவாயில்லை. கவுண்டம்பாளையத்துல இருக்கற கார்ப்பரேஷன் ஆபீசுக்கு போனா, ஒருமையில திட்டுறாங்களாம்; காலையில் போனா, 'சர்வர் ப்ராப்ளம்'ன்னு சொல்லி திருப்பி அனுப்புறாங்களாம். மாலை, 4:00 மணிக்கு பிறகு போயி, 'கவனிச்சா' மட்டும் 'அப்டேட்' செய்றாங்களாம்,''

''ஏதோ, ஒரு ஆபீசுல மராமத்து செய்றதுக்கு, லட்சக்கணக்குல செலவு செஞ்சிருக்காங்களாமே,''

''ஆமாக்கா, டவுன்ஹால்ல இருக்கற மெயின் பில்டிங்ல, கார்ப்பரேஷன் துணை கமிஷனருக்கு 'ரூம்' இருக்கு. 2019ல, புதுசா பிளைவுட் அடிச்சு, புதுப்பிக்கிற வேலை நடந்துச்சு. அதுக்கு, 18 லட்சம் ரூபாய்க்கு, இன்ஜி., செக்சன்காரங்க மதிப்பீடு செஞ்சிருக்காங்க. இது சம்பந்தமா கவுன்சிலில் நிறைவேத்துன தீர்மானத்தை, இணையதளத்துல வெளியிட்ட பிறகே, இது மாதிரியான தில்லுமுல்லு வேலையெல்லாம், வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு,''

''அடக்கொடுமையே, துணை கமிஷனர் ரூமுக்கே, 18 லட்சம் ரூபாய் கணக்கு எழுதியிருக்காங்கன்னா. 'ஸ்மார்ட் சிட்டி' சி.இ.ஓ., ரூம் புதுப்பிக்க, எவ்வளவு எழுதியிருக்காங்கன்னு தெரியலையே,''வரி செலுத்த மையத்துக்குள் சென்ற மித்ரா, சிறிது நேரத்தில் ரசீதுடன் திரும்பி வந்தாள்.''மக்களிடம் வசூலிச்ச வரி பணத்தை, சுருட்டிய வரி வசூலர் விவகாரம் சம்பந்தமா, மறுபடியும் விசராணைக்கு உத்தரவிட்டிருக்காங்களாமே,''

''அக்கா, அந்த விஷயத்துல மறுபடியும் விசாரிக்க வேண்டியதே இல்லையாம். விசாரணை அறிக்கை 'பைல்'ல இருக்குதாம். அதை முழுசா படிச்சா உண்மை தெரியும்னு சொல்றாங்க. பணத்தை பறிமுதல் செய்யணும்; போலீசுல புகார் கொடுத்து, சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கணும். உடந்தையா இருந்தவங்க மேல துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்னு கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் சொல்றாங்க. புது கமிஷனர், செய்வாரான்னு பார்ப்போம்,''ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X