பொது செய்தி

தமிழ்நாடு

தெலுங்குபாளையம் ஜோசியர் வீதியில் நேரம் சரியில்லை!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொதுக்குழாய் அருகே திறந்திருக்கிறது சாக்கடை கால்வாய்குடிநீரில் கலக்குது மாசுவடவள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, தொட்டியில் இருந்து, சுற்றுப்பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்தொட்டி முறையாக பராமரிக்காமல், திறந்த நிலையில் உள்ளது. குப்பை, கழிவுகள் விழுந்து, நீர் மாசடைகிறது. தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.- கணேசன், வடவள்ளி.மரத்தை பாதுகாப்பாக

பொதுக்குழாய் அருகே திறந்திருக்கிறது சாக்கடை கால்வாய்

குடிநீரில் கலக்குது மாசுவடவள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, தொட்டியில் இருந்து, சுற்றுப்பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்தொட்டி முறையாக பராமரிக்காமல், திறந்த நிலையில் உள்ளது. குப்பை, கழிவுகள் விழுந்து, நீர் மாசடைகிறது. தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.- கணேசன், வடவள்ளி.

மரத்தை பாதுகாப்பாக அகற்றணும்ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு மற்றும் கவுலிபிரவுன் ரோடு சந்திப்பில் உள்ள மரம், விழும் நிலையில் உள்ளது; விழுந்து விபத்து ஏற்படும் முன், பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- வரதராஜன், ஆர்.எஸ்.புரம்.

கால்நடைகளால் இடையூறுமருதமலை ரோடு, பி.என்.புதுார் பஸ் ஸ்டாப் முதல், வடவள்ளி வரை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- முத்துகுமார், பி.என்.புதுார்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்செல்வபுரம், தில்லை நகர், வ.உ.சி., வீதி -2ல், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- சுந்தரம், தில்லை நகர்.

இறைச்சிக்கழிவால் துர்நாற்றம்ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகர், சிவ விஷ்ணு கோவில் பின்புறம் உள்ள, சங்கனுார் பள்ளத்தில் இறைச்சி கழிவு கொட்டப்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- மணி, ராமநாதபுரம்.

துரைசாமி நகரில் குப்பை குவியல்கோல்டுவின்ஸ், துரைசாமி நகருக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- செந்தில்குமார், துரைசாமி நகர்.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்கே.கே.புதுார், கோ-ஆபரேட்டிவ் ஏ காலனி, சபாபதி வீதியில், சாக்கடை கால்வாய் சிதிலமடைந்துள்ளது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- லட்சுமணன், சபாபதி வீதி.

விளக்குகள் எரிவதில்லைதுடியலுார் அருகே உள்ள, இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரம் உள்ள, மின் கம்பங்களில் ஒன்றில் கூட, விளக்கு எரிவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை.- உமாசங்கர், இடிகரை.

பொதுக்குழாய் அருகே துர்நாற்றம்தெலுங்குபாளையம், ஜோசியர் வீதியில் உள்ள, பொதுக்குழாய் அருகில், சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- கணேசன், தெலுங்குபாளையம்.

சாக்கடை கால்வாய் அடைப்புதடாகம் ரோடு, இடையர்பாளையம், பூம்புகார் நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- லட்சுமி, பூம்புகார் நகர்.

விழிப்புணர்வு இல்லைசிறுவாணி ரோடு, வேம்பு நகரில், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டியை இப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில்லை. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தொட்டியின் அருகிலேயே குப்பையை வீசி செல்கின்றனர். இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- தேவாரம், பி.என்.புதுார்.

மின் கம்பத்தை மாற்றணும்செட்டி வீதி, கே.சி.தோட்டம், மூன்றாவது கட் ரோட்டில் உள்ள, மின் கம்பத்தின் (எண்: 16) கீழ் பாகம் சிதிலமடைந்துள்ளது; விபத்து அபாயம் உள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- சுந்தரம், கே.சி.தோட்டம்.

கொசு தொல்லை தாங்க முடியலமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, ராஜா நகர், முதல் வீதி, பெரியார் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், ஏற்பட்டுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராமராஜ், ராஜா நகர்.

விபத்து அபாயம்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகில், ஆர்.வி.எல்.வெஸ்ட் காலனி செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்துள்ளது. இக்குழி, கற்கள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்; சிலாப்பை சரி செய்ய வேண்டும்.- சந்திரன், சிங்காநல்லுார்.

நாய்த்தொல்லைபோத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, ஸ்ரீராம் நகர் அருகே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- முருகன், ஸ்ரீராம் நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X