பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையில் ஆக்கிரமித்திருந்த 109 வீடுகள் இடித்து அகற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வடவள்ளி:வடவள்ளியில், ஓடையை ஆக்கிரமித்து இருந்த, 109 வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி, முல்லை நகர் பகுதியில், ஓடையை ஆக்கிரமித்திருந்த, 18 வீடுகளும்,

வடவள்ளி:வடவள்ளியில், ஓடையை ஆக்கிரமித்து இருந்த, 109 வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி, முல்லை நகர் பகுதியில், ஓடையை ஆக்கிரமித்திருந்த, 18 வீடுகளும், பி.என்., புதூர் சுண்ணாம்பு கால்வாய், 20 வீடுகளும், முன்னாள் ராணுவத்தினர் காலனியில், 67 வீடுகளையும் அகற்ற திட்டமிடப்பட்டது. அங்கிருந்த மக்களுக்கு, கோவைபுதூரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கப்பட்டன.அனைவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று வீடுகளுக்கு, குடிபெயர்ந்து சென்றதால், நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X