பொது செய்தி

தமிழ்நாடு

பூம்புகார் அங்காடியில் ஆடி விற்பனை கண்காட்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை பெரியகடை வீதியில் உள்ள, பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியில், ஆடி விற்பனை கண்காட்சி, நேற்று துவங்கியது.பூம்புகார் விற்பனை அங்காடி மேலாளர் ரொனால்டு செல்வசஸ்டின் கூறியதாவது:ஆடியை முன்னிட்டு, சிறப்பு விற்பனை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, படுக்கை விரிப்புகள், கோட்டுகள், மேசை விரிப்புகள், தலையணை உறைகள், வாழைநார் புடவைகள்,

கோவை:கோவை பெரியகடை வீதியில் உள்ள, பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியில், ஆடி விற்பனை கண்காட்சி, நேற்று துவங்கியது.பூம்புகார் விற்பனை அங்காடி மேலாளர் ரொனால்டு செல்வசஸ்டின் கூறியதாவது:ஆடியை முன்னிட்டு, சிறப்பு விற்பனை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, படுக்கை விரிப்புகள், கோட்டுகள், மேசை விரிப்புகள், தலையணை உறைகள், வாழைநார் புடவைகள், காட்டன் புடவைகள், அலங்கார தோரணங்கள், மலைத்தேன், தானிய வகைகள் மற்றும் பழங்குடி மக்கள் உருவாக்கிய கைவினை பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இவற்றோடு, மர பொம்மைகள், காகிதக் கூழில் செய்யப்பட்ட பொம்மைகள், ஓவியங்கள், வெள்ளை உலோக பரிசு பொருட்கள், தஞ்சை ஓவியங்கள் மற்றும் பித்தளையில் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.இங்கு வாங்கும் அனைத்து கைவினை பொட்களுக்கும், 10 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சி ஆக., 14ம் தேதி வரை, காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X