கடல் வழிகாட்டு மசோதா: ராஜ்யசபாவில் தாக்கல்| Dinamalar

கடல் வழிகாட்டு மசோதா: ராஜ்யசபாவில் தாக்கல்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி : கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கடலில் கப்பல் போக்குவரத்துக்கு கலங்கரை விளக்கம் வாயிலாக வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டு வந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1927ல் கலங்கரை விளக்க சட்டம் இயற்றப்பட்டது.தற்போது பழைய கலங்கரை விளக்கங்களை

புதுடில்லி : கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.



latest tamil news



கடலில் கப்பல் போக்குவரத்துக்கு கலங்கரை விளக்கம் வாயிலாக வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டு வந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1927ல் கலங்கரை விளக்க சட்டம் இயற்றப்பட்டது.தற்போது பழைய கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலங்களாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டு பணியில் பல நவீன தொழில்நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன.எனவே பழைய கலங்கரை விளக்க சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு கடல் வழிகாட்டு மசோதா என பெயர் மாற்றம் செய்து பல புதிய வசதிகளை வரையறுக்க மத்திய அரசு முடிவு செய்தது.


latest tamil news



இந்த புதிய மசோதா லோக்சபாவில் மார்ச்சில் நிறைவேறியது.இதையடுத்து இந்த பெயர் மாற்று மசோதாவை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X