பொது செய்தி

தமிழ்நாடு

டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிற்கான சேர்க்கைக்கு, இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, முதலாமாண்டு சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஆக., 5ம் தேதி வரை நேரடியாக,

கோவை:மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிற்கான சேர்க்கைக்கு, இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, முதலாமாண்டு சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஆக., 5ம் தேதி வரை நேரடியாக, இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிளஸ் பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயாலஜி, இன்பர்மேஷன் பிராக்டிக்ஸ், பயோடெக்னாலஜி, டெக்னிக்கல் தொழில்படிப்புகள், அக்ரிகல்ச்சர், இன்ஜினியரிங் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ், என்டர்பிரனர்ஷிப் ஆகிய பாடங்களில், ஏதேனும் மூன்று பாடங்களை படித்து இருக்க வேண்டும். அல்லது, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ., இரண்டாண்டு முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தவிர்த்த பிறர், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் இணையம் வாயிலாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, https://www.tngptc.in/https://www.tngptc.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.இத்துடன், செயற்கை ஆய்வகங்கள் மற்றும் முடநீக்கியியல், ஒப்பனைக் கலை ஆகியவற்றில் சேர்வதற்கும், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X