பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் பெற, மாநகர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.தீபாவளிப் பண்டிகை வரும் நவ., 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோர், தகுந்த ஆவணங்களுடன் வரும், 22 ம் தேதி முதல் ஆக., 21ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்

கோவை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் பெற, மாநகர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.தீபாவளிப் பண்டிகை வரும் நவ., 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசு உரிமம் பெற விரும்புவோர், தகுந்த ஆவணங்களுடன் வரும், 22 ம் தேதி முதல் ஆக., 21ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பப்படிவம் AE-5- ல் ரூ. 2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை, உரிமக் கட்டணம் ரூ. 1,200 கருவூல வங்கியில் செலுத்தியதற்கான ரசீது இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு, கூடுதலாக இரு புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.ஆதார் அல்லது ரேஷன்கார்டு நகல், பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் ஆறு வரைபட நகல்கள், முழு முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மனுதாரர் கையொப்பம், சொந்தக் கட்டடமாக இருந்தால், 2021 - -22-ம் ஆண்டு செப்., 30 வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.வாடகை கட்டடம் எனில், சொந்த கட்டடத்துக்கு குறிப்பிட்டதைப் போல சொத்துவரி ரசீது, ரூ. 20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உரிமையாளரின் சம்மதக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை, இதர அரசுத்துறை கட்டடம் எனில் அந்தந்த துறை சார்ந்த அலுவலகத்தின் மறுப்பின்மைக் கடிதம் ஆகியவற்றையும், சமர்ப்பிக்க வேண்டும். ரோட்டோர கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது' என அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X