பொது செய்தி

தமிழ்நாடு

டி.கே.மார்க்கெட்டில் வசூல் விவசாயிகள் கடும் எதிர்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை டி.கே.மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு செல்லும் விளைபொருளுக்கும், வியாபாரிகள் வாங்கிவரும் காய்கறி மூட்டைகளுக்கும், அதிக சுங்கத்தொகை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, டி.கே.மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ஒரு மூட்டை எடுத்து வர சென்ற, மினிடோர் மூன்று சக்கர

கோவை:கோவை டி.கே.மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு செல்லும் விளைபொருளுக்கும், வியாபாரிகள் வாங்கிவரும் காய்கறி மூட்டைகளுக்கும், அதிக சுங்கத்தொகை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, டி.கே.மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ஒரு மூட்டை எடுத்து வர சென்ற, மினிடோர் மூன்று சக்கர ஆட்டோவுக்கு, நாற்பது ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.அதே போல், விளை பொருட்களை இறக்க செல்லும், சரக்கு ஆட்டோக்களுக்கும், 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதே போல், ஒவ்வொரு நடைக்கும் சுங்ககட்டணம் வசூலிக்கப்படுவதால் வியாபாரிகளும், விவசாயிகளும், கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.அதனால் நியாயமான சுங்கத்தொகை வசூலிக்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X