காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிராக கர்நாடக அரசு மனு தாக்கல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் பயன்படுத்தும் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். அந்த நீரை, வறட்சியில் வாடும் தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிட, இந்த திட்டம் வழிவகுக்கும்.இந்த திட்டத்தால் முதல்

புதுடில்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் பயன்படுத்தும் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். அந்த நீரை, வறட்சியில் வாடும் தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிட, இந்த திட்டம் வழிவகுக்கும்.இந்த திட்டத்தால் முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பயனடையும். இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், மூன்றாவதாக விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெற்று பயனடையும்.

இந்நிலையில், இந்த காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X