தமிழ்நாடு

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் எல்லோரும் பாஸ்! 450க்கு மேல் 45 சதவீதம் பேர்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 450க்கு மேல் 45 சதவீதம் பேர்!கோவை, ஜூலை 20-கொரோனா காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், வழக்கமான எதிர்பார்ப்புகள் இன்றி, ரிசல்ட் நேற்று வெளியானது. மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால், வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, அனைத்து வகுப்புகளுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் எல்லோரும் பாஸ்!  450க்கு மேல் 45 சதவீதம் பேர்

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 450க்கு மேல் 45 சதவீதம் பேர்!கோவை, ஜூலை 20-கொரோனா காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், வழக்கமான எதிர்பார்ப்புகள் இன்றி, ரிசல்ட் நேற்று வெளியானது. மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால், வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, அனைத்து வகுப்புகளுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு இல்லாத நிலையில், உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டுமென்பதற்காக, மதிப்பெண் கணக்கிடும் முறை வெளியிடப்பட்டது.இதன்படி, பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 சதவீதம், பிளஸ் 1 முக்கிய பாடங்களில் எழுத்துத்தேர்வில் மட்டும், 20 சதவீதம் மற்றும் பத்தாம் வகுப்பில், 50 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த ரிசல்ட், நேற்று வெளியிடப்பட்டது.

கோவை மாவட்டத்தில், 356 மேல்நிலைப்பள்ளிகளில், 34 ஆயிரத்து 845 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்கு தேர்வு நடக்காததால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வழக்கம் போல், நடப்பு ஆண்டிலும் மாணவர்களை விட(15 ஆயிரத்து 840), மாணவிகளே அதிகம் (19 ஆயிரத்து ஐந்து பேர்) என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறன் மாணவர்கள் 122 பேரும், இதில் அடக்கம்.பொதுத்தேர்வு நடக்காததால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால், முதன்முறையாக 108 அரசுப்பள்ளிகளிலும், மாணவர்கள் 'சென்டம் ரிசல்ட்' பெற்றனர். கொரோனா விடுமுறை காரணமாக, பள்ளி வளாகங்களில், எந்த பரபரப்பையும் காண முடியவில்லை.முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''பொதுத்தேர்வு ரிசல்ட், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களில், திருப்தி ஏற்படாத மாணவர்கள், தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து, வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தசம எண் இலக்க அடிப்படையில், துல்லியமாக மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு, விளக்கம் பெறலாம்,'' என்றார்.மொத்த மாணவர்களில், 45 சதவீதம் பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தாலும், தேர்வு எழுத வராமல் இருந்தவர்களுக்கும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, 600க்கு 200 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள், 325 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.பிள்ளையார் சுழி போட்டது 'தினமலர்'பிளஸ் 2 ரிசல்ட்டில், தசம எண் அடிப்படையில், துல்லியமாக எண்களை வெளியிட வேண்டுமென, நமது நாளிதழில், கடந்த ஜூன் 29ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இதை பின்பற்றியதால் தான், கவுன்சிலிங் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது பயனடைந்துள்ளதாக என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.எத்தனை பேர்600- 551 3,137 பேர்550.99- 501 9,801 பேர்500.99- 451 9,525 பேர்450.99-401 6,877 பேர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithya - Chennai,இந்தியா
20-ஜூலை-202106:38:00 IST Report Abuse
Nithya Dharma pass
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X