சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : மாணவியரின் பாலியல் புகாரில் கைதான, சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது மூன்று மாணவியர், பாலியல் புகார் அளித்தனர். 'போக்சோ' உள்ளிட்ட பல பிரிவுகளில், அவர் மீது வழக்கு

செங்கல்பட்டு : மாணவியரின் பாலியல் புகாரில் கைதான, சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது மூன்று மாணவியர், பாலியல் புகார் அளித்தனர். 'போக்சோ' உள்ளிட்ட பல பிரிவுகளில், அவர் மீது வழக்கு பதியப்பட்டது.இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இரு வழக்குகளில் சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த இரு வழக்குகளிலும், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் கோரி, அவரது வழக்கறிஞர், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தமிழரசி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X