பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலங்களில் இருந்து 'ஆன்லைனில்' போதை மருந்து!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து, போதை மாத்திரைகளை தருவிப்பது குறித்து, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே, இளைஞர்களிடத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்பாடு, அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தும் கலாசாரம், இளைஞர்களிடம் அதிகமாக

கோவை:ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து, போதை மாத்திரைகளை தருவிப்பது குறித்து, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே, இளைஞர்களிடத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்பாடு, அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தும் கலாசாரம், இளைஞர்களிடம் அதிகமாக பரவி உள்ளது.வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்தது. மாத்திரையை பொடியாக்கி, அதை 'டிஸ்டில்டு வாட்டர்' உடன் கலந்து, வடிகட்டி ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் அதிகரித்தது.இதை தடுக்க, மருந்துக்கட்டுப்பாட்டு நிர்வாகத்தினர், மருந்து சீட்டு இன்றி எந்த மருந்துகளையும் கொடுக்கக்கூடாது என, மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டனர்.இதையடுத்து, தற்போது வெளிமாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, இத்தகைய மருந்துகளை பெறுவது அதிகரித்துள்ளது. இதைத்தடுக்க, மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X