ஈராக்கில் குண்டுவெடிப்பு 18 பேர் பலி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பாக்தாத் : ஈராக் தலைநகரில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், 18 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். மேற்காசிய நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில், சந்தை ஒன்றில், பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க, நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.அப்போது, அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.இந்த குண்டுவெடிப்பு

பாக்தாத் : ஈராக் தலைநகரில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், 18 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

மேற்காசிய நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில், சந்தை ஒன்றில், பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க, நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.அப்போது, அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தோரின் உடல்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணையை பாதுகாப்புப் படையினர் துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X