கோட்டையில் குவிந்த கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டையில் குவிந்த கூட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
சென்னை : முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு அளிப்பதற்காக, நேற்று ஏராளமானோர் குவிந்தனர். முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தினமும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. கடந்த, 12ம் தேதி, முதல்வர் நேரடியாக மனு பெறுவதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் மனு கொடுக்க குவிந்தனர். முதல்வர் சிலரிடம் மனு பெற்று சென்றார். இந்நிலையில், நேற்றும் மனு

சென்னை : முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு அளிப்பதற்காக, நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தினமும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. கடந்த, 12ம் தேதி, முதல்வர் நேரடியாக மனு பெறுவதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் மனு கொடுக்க குவிந்தனர். முதல்வர் சிலரிடம் மனு பெற்று சென்றார். இந்நிலையில், நேற்றும் மனு கொடுக்க ஏராளமானோர் தலைமை செயலகம் வந்தனர். போலீசார் அவர்களை வரிசையில் நிற்க வைத்து, 50, 50 பேராக, தலைமை செயலகத்தின் உள்ளே அனுப்பினர். அவர்கள் அமர, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் வெளிப்புறம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.பலர் வரிசையில் நின்றனர். நிற்க முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு அலுவலர்களிடம், மனுக்களை அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X