பொது செய்தி

தமிழ்நாடு

காயத்தில் காகம் கொத்திய பரிதாபம்! பாரத மாதா நற்பணி அறக்கட்டளை உதவி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:காலில் காயத்துடன் சுற்றியவருக்கு, பாரத மாதா நற்பணி அறக்கட்டளை முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச்சென்றும்,புத்தாடைகள் வழங்கியும் உதவிக்கரம் நீட்டியது.சிங்காநல்லுார் உழவர் சந்தை எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற நபர் காலில் பெரிய காயத்துடன் சுற்றுவதாகவும், காயத்தை காகங்கள் கொத்திக் குதறுவதாகவும், நமது நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது.உலகில்
 காயத்தில் காகம் கொத்திய பரிதாபம்! பாரத மாதா நற்பணி அறக்கட்டளை உதவி

கோவை:காலில் காயத்துடன் சுற்றியவருக்கு, பாரத மாதா நற்பணி அறக்கட்டளை முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச்சென்றும்,புத்தாடைகள் வழங்கியும் உதவிக்கரம் நீட்டியது.சிங்காநல்லுார் உழவர் சந்தை எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற நபர் காலில் பெரிய காயத்துடன் சுற்றுவதாகவும், காயத்தை காகங்கள் கொத்திக் குதறுவதாகவும், நமது நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது.உலகில் மனிதநேயமிக்க பலர், இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில், காலை முதலே, நமது அலுவலகத்துக்கு பலர் போன் செய்து, அந்த நபருக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவதாக, தகவல் தெரிவித்தனர்.இதில் உடையம்பாளையம், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுரி சங்கர் மற்றும் சிலர், எங்கும் விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டவரை தேடி நேரில் சென்றனர். தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்த அந்த நபரை, வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, காலில் இருந்த காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.முன்னதாக, அவருக்கு முடிதிருத்தி குளிக்க வைத்தும், புத்தாடை அணிவித்தும் தயார் செய்தனர். தொடர்ந்து, உணவு வழங்கி அவரை சிங்காநல்லுாருக்கு, அனுப்பி வைத்தனர்.எவ்வித அருவருப்பும் பார்க்காமல், சக மனிதனுக்கு நேர்ந்த துயரை துடைக்க முன்வந்த பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகளை, அப்பகுதி மக்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X