பொது செய்தி

தமிழ்நாடு

கமிஷனரை அதிர வைத்த கடிதம்!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் வசிப்பவரில் ஒருவர் எழுதிய கடிதம், மாநகராட்சி கமிஷனரை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் செலுத்தியிருந்த, குடிநீர் 'டிபாசிட்' தொகையை, திருப்பிக் கொடுத்தது, மாநகராட்சி நிர்வாகம்.அப்படி, என்ன நடந்தது?கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், தனது அலுவலகத்துக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அவரே படிக்கிறார். கடிதங்கள் தொடர்பாக, நடவடிக்கை

கோவை:கோவையில் வசிப்பவரில் ஒருவர் எழுதிய கடிதம், மாநகராட்சி கமிஷனரை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் செலுத்தியிருந்த, குடிநீர் 'டிபாசிட்' தொகையை, திருப்பிக் கொடுத்தது, மாநகராட்சி நிர்வாகம்.அப்படி, என்ன நடந்தது?கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், தனது அலுவலகத்துக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அவரே படிக்கிறார். கடிதங்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறார்.இ-மெயில்களையும், அவரே படித்துப்பார்த்து, நடவடிக்கைக்கு உட்படுத்துகிறார். 'வாட்ஸ்ஆப்', 'டிவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' மூலம் வரும் புகார்களை கவனிக்க, தனிக்குழு நியமித்திருக்கிறார்.உதாரணத்துக்கு, ஏதேனும் ஒரு பகுதியில் குப்பை தேங்கி இருப்பதாகவோ அல்லது, அசுத்தமாக இருப்பதாகவோ, 'வாட்ஸ்ஆப்' மூலம் புகைப்படமாக தகவல் அனுப்பினால், அடுத்த சில மணி நேரத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.புகார் அனுப்பிய நபருக்கு, சுத்தம் செய்த பின் எடுத்த புகைப்படம், மாநகராட்சியில் இருந்து அனுப்பி வைப்பதோடு, 'தங்களது தகவலுக்கு நன்றி' எனவும், தெரிவிக்கப்படுகிறது.அதிர வைத்த லெட்டர்!சமீபத்தில், மாநகராட்சி கமிஷனருக்கு வந்த ஒரு கடிதம், அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. அக்கடிதத்தில், 'குடிநீர் இணைப்புக்கான 'டிபாசிட்' தொகை ரூ.4 ஆயிரத்தை, தவறுதலாக இரு முறை செலுத்தி விட்டேன். இரண்டாவதாக செலுத்திய தொகையை திருப்பிக் கொடுக்காமல், மாநகராட்சி அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர்.அத்தொகையை, அரசு சார்பில் செய்யும் ஏதேனும் நலத்திட்ட பணிகளுக்கு, பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி, உரிமை கோர மாட்டேன்' என, குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக, கமிஷனர் ராஜகோபால், வருவாய் பிரிவினரிடம் விசாரித்தார். அதற்கு, புதிதாக குடிநீர் இணைப்பு பெற, 5,000 ரூபாய் 'டிபாசிட்' செலுத்த வேண்டும். பழைய இணைப்புதாரர்கள், 1,000 ரூபாய் 'டிபாசிட்' செலுத்தி உள்ளனர். நிலுவை தொகை ரூ.4,000 வசூலிப்பதாக, வருவாய் பிரிவினர் தெரிவித்தனர்.கூடுதலாக செலுத்திய 'டிபாசிட்' தொகையை, கடிதம் எழுதியவருக்கு திருப்பிக் கொடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, அத்தொகை அவரிடம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X