பொது செய்தி

தமிழ்நாடு

'செக் கிளியரன்சில்' இனி தாமதம் கூடாது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:அஞ்சல் நிலையங்களில் செலுத்தப்படும் காசோலைகள் கிளியர் செய்யப்பட்ட அதே நாளில், சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைக்க வேண்டும் என, அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது.அஞ்சல் நிலையங்களில், புதிய கணக்கை திறப்பதற்காக வங்கி காசோலைகளை வாடிக்கையாளர்கள் அளிக்கின்றனர்.சேமிப்பு கணக்கு, செல்வமகள், வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்காக, காசோலை அளிக்கப்படும் போதும்,

கோவை:அஞ்சல் நிலையங்களில் செலுத்தப்படும் காசோலைகள் கிளியர் செய்யப்பட்ட அதே நாளில், சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைக்க வேண்டும் என, அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது.அஞ்சல் நிலையங்களில், புதிய கணக்கை திறப்பதற்காக வங்கி காசோலைகளை வாடிக்கையாளர்கள் அளிக்கின்றனர்.சேமிப்பு கணக்கு, செல்வமகள், வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்காக, காசோலை அளிக்கப்படும் போதும், தொகையை வரவு வைப்பதில் காலதாமதம் நிகழ்கிறது.இவ்வாறு கிளியர் செய்யப்பட்ட காசோலை பணத்தை, வரவு வைக்காமல் தாமதப்படுத்துவதால், வாடிக்கையாளர்களுக்கு வட்டி இழப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களிடமிருந்து தபால் இயக்குனரகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் அனுப்பப்படுகிறது. இதை விசாரித்த அஞ்சல் இயக்குனரகம், காசோலைகள் கிளியர் செய்யப்படும் அதேநாளில், சம்பந்தப்பட்ட கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும்.புதிய கணக்கு திறப்பதற்கெனில், அதே நாளில் கணக்கு திறக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்பட வேண்டும். காசோலை செயல்முறையில் எந்த தாதமும் நிகழக்கூடாது என்று,அஞ்சல் இயக்குனரகம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X