பொது செய்தி

தமிழ்நாடு

'ப்ரீ' எல்.கே.ஜி., திட்டத்திற்கு கல்வி கட்டணம் 'அப்டேட்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:மத்திய அரசின் இலவச எல்.கே.ஜி., திட்டத்திற்கு, புதிய கல்வி கட்டணம், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளதால், ஆய்வு செய்யுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கோவை மாவட்டத்தில், 380 தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி, இலவசமாக படிக்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியோர், இத்திட்டத்திற்கு

கோவை:மத்திய அரசின் இலவச எல்.கே.ஜி., திட்டத்திற்கு, புதிய கல்வி கட்டணம், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளதால், ஆய்வு செய்யுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கோவை மாவட்டத்தில், 380 தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி, இலவசமாக படிக்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியோர், இத்திட்டத்திற்கு வரும் ஆக., 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டுக்கு, இத்திட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்காக, புதிய கல்வி கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது.இதன்படி, எல்.கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்பு வரை, 12 ஆயிரத்து 458 ரூபாயாக கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், எட்டாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக கல்வி கட்டணம் நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் இணைந்த பள்ளிகளுக்கு, பிரத்யேக கல்வி கட்டண நிர்ணய குழு, கட்டண விபரங்கள் அளித்துள்ளன. இவ்விரு பட்டியலில், குறைவான கல்வி கட்டணத்தை, உறுதி செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X