பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யவதற்காக, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.கூடலுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான ஆக்சிஜனை, கோவையிலிருந்து எடுத்து வந்து, பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று, தீவிரமாக இருந்தபோது, கோவை சென்று ஆக்ஸிஜன் எடுத்து வருவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டது.சிரமத்துக்கு தீர்வு காணும்
 புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறப்பு

கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யவதற்காக, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.கூடலுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான ஆக்சிஜனை, கோவையிலிருந்து எடுத்து வந்து, பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று, தீவிரமாக இருந்தபோது, கோவை சென்று ஆக்ஸிஜன் எடுத்து வருவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டது.சிரமத்துக்கு தீர்வு காணும் வகையில், கூடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில், 'சமரிடன் சமிதி' அறக்கட்டளை சார்பில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடந்தது. இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் திறந்து வைத்தனர்.அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் புகழேந்தி கூறுகையில், ''இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் மூலம், 20 படுக்கைகளுக்கு தேவையான, ஆக்சிஜனை தொடர்ச்சியாக வழங்க முடியும். எங்கள் மருத்துவமனை தேவை மட்டுமின்றி, பிற மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X