பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடி மாணவர்களுக்கு மாலை சேர்க்கை பணியில் வித்தியாசம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, பொன்னானி அரசு பழங்குடியினர் பள்ளி நிர்வாகம் சார்பில், பழங்குடியின மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பெற்றோருக்கு தாம்பூலம் கொடுத்து மாணவர் சேர்க்கை நடந்தது.பந்தலுார் அருகே, பொன்னானி அரசு பழங்குடியினர் நடுநிலை பள்ளி சார்பில், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, முதல் வகுப்பு மற்றும்
 பழங்குடி மாணவர்களுக்கு மாலை சேர்க்கை பணியில் வித்தியாசம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, பொன்னானி அரசு பழங்குடியினர் பள்ளி நிர்வாகம் சார்பில், பழங்குடியின மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பெற்றோருக்கு தாம்பூலம் கொடுத்து மாணவர் சேர்க்கை நடந்தது.பந்தலுார் அருகே, பொன்னானி அரசு பழங்குடியினர் நடுநிலை பள்ளி சார்பில், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, முதல் வகுப்பு மற்றும் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், பெற்றோருக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 63 பழங்குடியின மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த வித்தியாச பணியில், பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X