பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரிக்கு அரசு விருது உழைத்தவர்களுக்கு கவுரவம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஊட்டி:பழங்குடியினர்; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நுாறு சதவீத தடுப்பூசி செலுத்தி, தேசிய அளவில், நீலகிரி விருது பெற காரணமான, டாக்டர்கள், இதர சுகாதார துறை பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது.வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கூறுகையில், ''நீலகிரிக்கு விருது கிடைக்க, பேருதவியாக இருந்த டாக்டர்கள்

ஊட்டி:பழங்குடியினர்; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நுாறு சதவீத தடுப்பூசி செலுத்தி, தேசிய அளவில், நீலகிரி விருது பெற காரணமான, டாக்டர்கள், இதர சுகாதார துறை பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது.வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கூறுகையில், ''நீலகிரிக்கு விருது கிடைக்க, பேருதவியாக இருந்த டாக்டர்கள் உட்பட 354 பேருக்கு பணிகளை பாராட்டி, பாராட்டு நற்சான்றிதழ்கள், கேடயம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது,'' என்றார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,''நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கும் போது, ஆரம்பத்தில் சாத்தியப்படுமா என்ற அச்சம் இருந்தது. இதற்காக, 'வாட்ஸ்- அப்' குழு ஏற்படுத்தப்பட்டது. தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் ஒன்றிணைத்து அதிகாலை, இரவு பகல் பாராமல் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றை தடுக்க, அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தி விருது பெற முடிந்தது,'' என்றார்.மாநில வனம் மற்றும் சுற்றுசூழல் முதன்மை செயலர் சுப்ரியாசாஹூ, எஸ்.பி., ஆசிஷ்ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷின், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X