கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜய் 'அப்பீல்' வழக்கு: வரி விலக்கு அமர்வுக்கு மாற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:சொகுசு கார் இறக்குமதிக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை, வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு, நுழைவு வரி

சென்னை:சொகுசு கார் இறக்குமதிக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை, வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சமீபத்தில் விசாரித்தார். அப்போது, மனுவை தள்ளுபடி செய்து, கொரோனா நிவாரண நிதிக்கு, ஒரு லட்சம் ரூபாய் செலுத்தும்படி, விஜய்க்கு, நீதிபதி உத்தரவிட்டார்.நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்தவும், 'ரியல் ஹீரோ'க்களாக இருக்க வேண்டும்; 'ரீல் ஹீரோ'க்களாக இருக்கக் கூடாது எனவும், உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். பின், இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜய், மேல்முறையீடு செய்தார்.உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல், மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு, இந்த வழக்கை மாற்றி பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு, டிவிஷன் பெஞ்ச் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X