சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.3.5 கோடி நிலம் மோசடி: எஸ்.பி., அதிரடியால் மீட்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருநெல்வேலி;திருநெல்வேலியில் அதிகாரிகள் துணையோடு, ரூ.3.5 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்தவர்கள் தலைமறைவாயினர்.எஸ்.பி., மணிவண்ணன் நடவடிக்கையால் நிலம் மீட்கப்பட்டது.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பழனிகுமார், 59. இவரது தந்தை ரத்தினவேலுக்கு சொந்தமான, 3 ஏக்கர் 53 சென்ட் நிலம் வள்ளியூரில் உள்ளது. அதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய். ரத்தினவேல் 2017ல் இறந்து விட்டார்.இதையறிந்த மோசடி

திருநெல்வேலி;திருநெல்வேலியில் அதிகாரிகள் துணையோடு, ரூ.3.5 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்தவர்கள் தலைமறைவாயினர்.எஸ்.பி., மணிவண்ணன் நடவடிக்கையால் நிலம் மீட்கப்பட்டது.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பழனிகுமார், 59. இவரது தந்தை ரத்தினவேலுக்கு சொந்தமான, 3 ஏக்கர் 53 சென்ட் நிலம் வள்ளியூரில் உள்ளது. அதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய். ரத்தினவேல் 2017ல் இறந்து விட்டார்.இதையறிந்த மோசடி கும்பல், ரத்தினவேல் உயிரோடு இருப்பது போலவும் அவர் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சிங்ககுமாருக்கு நிலத்தை விற்பனை செய்வதாகவும், கங்கைகொண்டானில் சார் - பதிவாளர் மயில்சாமி முன்னிலையில் போலியான பத்திர பதிவு மேற்கொண்டனர்.இதுகுறித்து, பழனிகுமார், எஸ்.பி., மணிவண்ணனிடம் புகார் செய்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர்.போலீசார் விசாரிப்பதை அறிந்ததும் அந்த கும்பல், மோசடி பத்திரத்தை சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்து, தலைமறைவாகி விட்டது.நிலம் மீட்கப்பட்டு, பழனிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி., மணிவண்ணன் கூறுகையில், ''நிலம் மீட்கப்பட்டுள்ளது.இருப்பினும் மோசடியின் பின்னணியில் உள்ள போலி நபர்கள், பத்திர பதிவிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X