கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் நியமிக்க தடை கோரும் வழக்கை நிராகரிக்க இ.பி.எஸ்., மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை;அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை, அபராதத்துடன் நிராகரிக்குமாறு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சார்பில், சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உட்கட்சி தேர்தலை நடத்தாமல், அ.தி.மு.க.,வின் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, சூர்யமூர்த்தி என்பவர், சென்னை

சென்னை;அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை, அபராதத்துடன் நிராகரிக்குமாறு, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சார்பில், சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உட்கட்சி தேர்தலை நடத்தாமல், அ.தி.மு.க.,வின் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, சூர்யமூர்த்தி என்பவர், சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., மற்றும் சசிகலா உள்ளிட்டோரிடம், பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நேற்று, நீதிபதி தாமோதரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்க கோரி, அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சூரியமூர்த்தி இன்றைய தேதியில் கட்சியின் உறுப்பினரே இல்லை; இந்த வழக்கை தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. உள் நோக்கத்தோடு இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளார். அவர் உறுப்பினர் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விசாரணையை, ஆக., 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X