மிரர் இமேஜ் எழுதி சாதித்தவருக்கு 4 விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மிரர் இமேஜ்' எழுதி சாதித்தவருக்கு 4 விருது

Added : ஜூலை 20, 2021
Share
ஓசூர்: ஓசூரில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளர், பின்வரிசையில், 'மிரர் இமேஜ்' எழுதி சாதித்துள்ளார். அவருக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் கணேசன், 52; ஓவியர். 32 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மனைவி, மகன், மகள் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன், 'யு
'மிரர் இமேஜ்' எழுதி  சாதித்தவருக்கு 4 விருது


ஓசூர்: ஓசூரில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளர், பின்வரிசையில், 'மிரர் இமேஜ்' எழுதி சாதித்துள்ளார். அவருக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் கணேசன், 52; ஓவியர். 32 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மனைவி, மகன், மகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், 'யு டியூப்'பில் வாலிபர் ஒருவர், பின்வரிசையில் ஒரு நிமிடத்தில், 20 வார்த்தைகளை எழுதியதை கணேசன் பார்த்தார். அதுபோல் தானும் எழுத முடிவு செய்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய, 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பான, 'விங்க்ஸ் ஆப் பயர்' என்ற புத்தகத்தை, கண்ணாடியில் பார்த்து படிக்கும் வகையில், மிரர் இமேஜாக எழுத துவங்கினார்.
தினமும் இரவில், மூன்று முதல் நான்கு பக்கங்கள் என, 200 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, 45 நாட்களில் மிரர் இமேஜாக எழுதி முடித்தார். இதை பாராட்டும் வகையில், 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட், பிரேவோ வேல்டு ரெக்கார்ட், இன்டர்நேஷனல் அச்சீவ்மென்ட் இந்தியா அவார்டு' ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. இவரை ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
***

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X