அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் : அமைச்சர் முத்துசாமி தகவல்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை:''கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான், ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும்,'' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சென்னை, கோவை, மதுரை,
 கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் : அமைச்சர் முத்துசாமி தகவல்

கோவை:''கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான், ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும்,'' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் துணை நகரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அது முன்னுதாரணமாக, மாதிரி நகரமாக இருக்க வேண்டும். பெருந்துறை, திருச்செங்கோடு பகுதிகளில், ஆட்டோ நகரம் உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும். வீட்டுவசதி வாரியத்திடம் பொதுமக்கள் வாங்கி, தற்போது பழுந்தடைந்த நிலையில் உள்ள கட்டங்களை மீண்டும் புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சில இடங்களை தேர்வு செய்து வருகிறோம். கோவைக்கான மாஸ்டர் பிளான், 1,211 சதுர கி.மீ., ஆக இருந்தது. கூடுதலாக,1,658 சதுர கி.மீ., சேர்க்கப்படவுள்ளது. ஒன்றரைஆண்டுகளில் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும். கோவை கவுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில், தவறு நடந்திருப்பின் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வு கூட்டத்தில், வீட்டு வசதித்துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, கலெக்டர் சமீரன், வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் சரவண வேல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி கோவை சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு பின்புறம், வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்தார். வீட்டு உரிமையாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், '' தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, வீட்டு உரிமையாளர்களின் வேண்டுகோளின் படி முடிந்தவரை கட்டித்தரப்படும். விரைவில் வரைபடம் தயாரிக்கப்படும். இப்பகுதியில் உள்ள வீடுகள் இடித்து அப்புறப்படுத்திய பின், அதில் ஐந்து மாடி கட்டடம் கட்டப்படும். அதில் முதல் மூன்று தளங்கள் ஏற்கனவே குடியிருக்கும் உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்படும்; மீதமுள்ள இரு தளங்கள் பொதுவிற்பனைக்கு ஒதுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Narita,ஜப்பான்
20-ஜூலை-202109:24:12 IST Report Abuse
Suresh அய்யோ அவ்வளவு சீக்கிரமாவா ???
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-ஜூலை-202108:16:25 IST Report Abuse
RajanRajan கொங்கு மண்டலம் யூனியன் பிரதேசம் வாழ்க. திராவிட ஊராட்சி ஒன்றியம் வாழ்க. தமிழ் வாழ்க. கோபாலபுர பரம்பரைகள் வாழ்க. ஓசி சோறுகள் வாழ்க.
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
20-ஜூலை-202110:40:48 IST Report Abuse
MANI DELHIஈரோட்டில் படித்து வளர்ந்தவன் என்ற முறைகள் இவரை பற்றி அறிவேன். எம் ஜி ஆரால் கைகாட்டப்பட்டு அதிமுகவில் வளர்ந்தவர். திமுகவில் நயவஞ்சக அரசியலுக்கு எதிர் வரிசையில் நின்று சேவை செய்ய முன்னிறுத்தப்பட்டார். ஆனால் கேவலம் அதே குள்ள நரிக்கூட்டத்தில் சேர்ந்தது தான் இவரது பாவச்செயல். கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் என்ற மரியாதைக்கு வேண்டுமானால் இவரை வாழ்த்தலாம். மற்றபடி இவரது பச்சோந்தி தனத்திற்கு எக்காலத்திலும் மக்கள் மனதளவில் ஏற்க மாட்டார்கள். இந்த சைக்காலஜியை வைத்து தான் கோவையில் உள்ளே நுழைந்து சேவை செய்வது போல் நடிக்கிறார் என்பது எனது கருத்து......
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202103:25:35 IST Report Abuse
rupya எந்த விஷயத்திலும் கோவையை திரும்பி பார்க்காத ஆளும் கட்சியினர் கொங்கு மண்டல பிரச்சினை கிளம்பியதும் கோவையை திரும்பி பார்க்க தொடங்கியுள்ளனர்.ஏமாளித்தனமாக இருந்தால் இவர்கள் குதிரை சவாரி செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X