பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' யோகா பயிற்சி ஈஷா இலவச வகுப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:'உயிர் நோக்கம்' என்ற யோகா வகுப்பு, ஆன்லைன் மூலம் இலவசமாக நடக்க உள்ளது. ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை, மூன்று நாட்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 6:30 முதல் 8:30 மணி வரை; காலை, 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை; மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக, யோகா பயிற்சி வகுப்பு நடக்கும்.பங்கேற்பாளர்கள், தங்களின்
 'ஆன்லைன்' யோகா பயிற்சி  ஈஷா இலவச வகுப்பு

தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:'உயிர் நோக்கம்' என்ற யோகா வகுப்பு, ஆன்லைன் மூலம் இலவசமாக நடக்க உள்ளது.

ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை, மூன்று நாட்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 6:30 முதல் 8:30 மணி வரை; காலை, 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை; மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக, யோகா பயிற்சி வகுப்பு நடக்கும்.

பங்கேற்பாளர்கள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஏதேனும் ஒரு பிரிவு நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வகுப்பில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். யோகா பயிற்சிகளை நாள்தோறும் செய்து வருவதன் மூலம், முதுகுதண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். மன அழுத்தம் குறையும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும்.இலவச யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவார்கள், isha.co/Uyirnokkam என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். உதவி தேவைப்பட்டால், 7383673836 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' செய்யலாம்.

வரும், 21ம் தேதி பகல், 12:00 மணியுடன், முன்பதிவு நிறைவு பெறுகிறது.நிறைவு நிகழ்ச்சியாக, ஜூலை, 25ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, தமிழில், சத்குருவுடன், 'ஆனந்த சங்கமம்' நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X