பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட எல்லை வரை ரோடு விரிவுபடுத்த வலியுறுத்தல் 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நெகமம்:திருப்பூர் மாவட்ட எல்லை வரையிலான, குறுகிய ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெகமம் ரோட்டில், திருப்பூர் மாவட்ட எல்லை துவங்குகிறது. இப்பகுதியில் ரோடு, குடிநீர் மற்றும் நிழற்குடை வசதிகள் இருந்தும், ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் குறுகலாகவே உள்ளது.பலமுறை, கோரிக்கை விடுத்தும், திருப்பூர்

நெகமம்:திருப்பூர் மாவட்ட எல்லை வரையிலான, குறுகிய ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெகமம் ரோட்டில், திருப்பூர் மாவட்ட எல்லை துவங்குகிறது.
இப்பகுதியில் ரோடு, குடிநீர் மற்றும் நிழற்குடை வசதிகள் இருந்தும், ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் குறுகலாகவே உள்ளது.பலமுறை, கோரிக்கை விடுத்தும், திருப்பூர் மாவட்ட எல்லை வரையிலான, நான்கு கி.மீ., துார ரோடு விரிவுபடுத்தவில்லை. இவ்வழியாக தென்னை நார், தேங்காய், மட்டைகள், ஆயில் மற்றும் கொப்பரை லோடுகள் அதிகளவில் காங்கேயம் கொண்டு செல்லப்படுகின்றன.
ரோடு அகலம் இல்லாத நிலையில், வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.இதை தவிர்க்க, நெகமத்தில் இருந்து, திருப்பூர் மாவட்ட எல்லை வரையிலான, குறுகலான ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேபோன்று, சின்னநெகமம் ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ், ரோடு விரிவுபடுத்த வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறைக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய நிர்வாகத்துக்கும் மனு கொடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X