பசுமை பாதையாகுமா? கோவை ரோட்டில் மரம் வளர்ப்பது எப்போது:இடம் இருந்தும் அதிகாரிகளுக்கு மனமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை பாதையாகுமா? கோவை ரோட்டில் மரம் வளர்ப்பது எப்போது:இடம் இருந்தும் அதிகாரிகளுக்கு மனமில்லை

Added : ஜூலை 20, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ரோட்டோரத்தில் வெட்டப்பட்ட நிழல் தரும் மரங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகள் வளர்ப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களும், விபத்துக்களில்
 பசுமை பாதையாகுமா? கோவை ரோட்டில் மரம் வளர்ப்பது எப்போது:இடம் இருந்தும் அதிகாரிகளுக்கு மனமில்லை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ரோட்டோரத்தில் வெட்டப்பட்ட நிழல் தரும் மரங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகள் வளர்ப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களும், விபத்துக்களில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி, ஆச்சிபட்டி முதல், கோவை ஈச்சனாரி வரையிலும், 26 கி.மீ., தொலைவுக்கு, நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி, 500.24 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது.முழுமையாக கான்கிரீட் ரோடு அமைக்கும் பணியும், முள்ளுப்பாடியில் ரயில்வே மேம்பாலமும், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி ஆகிய இடங்களில் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக, கோவை ரோட்டில், 2,180 மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றில், 50 நாட்டு மரங்கள் வேருடன் தோண்டி எடுத்து மறுநடவு செய்யப்பட்டன. இதனால், மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சியளித்த கோவை ரோடு, தற்போது, மரங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.கோர்ட் உத்தரவுப்படி, வெட்டப்பட்ட ஒரு மரத்துக்கு மாற்றாக, 10 மரக்கன்று என, கணக்கிட்டால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்று வளர்க்க வேண்டும். அதற்கு தேவையான இடம், மரக்கன்று மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மரம் வளர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.காற்று மாசுபடுவதை குறைத்து, நிழல் தந்து, பறவைகளுக்கு உணவளித்து, அவைகளின் வாழிடமாகவும், மனிதர்களுக்கு சுவாசத்தையும் கொடுத்த மரங்களுக்கு மாற்றாக, ரோடு எல்லையில் மரக்கன்று வளர்க்க வேண்டும்.உயரமாக வளரும் மரங்காக இல்லாமல், உயரம் குறைந்த குறு மரங்களை வளர்த்தால், மக்களும், பறவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பல இடங்களில் இடவசதி இருந்தும், அதிகாரிகள் மனது வைக்காமல் உள்ளது வேதனையளிக்கிறது, என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.'சேவ் ட்ரீஸ்' திட்டம் என்னாச்சு!கோவை ரோடு பணிகள் நிறைவடைந்ததும் மரக்கன்று வளர்க்கும் திட்டத்துக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டராக இருந்த காயத்ரி நடவடிக்கை எடுத்தார். இதற்காக, சப் - கலெக்டர் தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து, 'சேவ் ட்ரீஸ்' என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கினர்.கோவை ரோட்டிலுள்ள பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், குடியிருப்போர் நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் ஒரு அமைப்பினரிடம் ஒப்படைத்து, மரம் வளர்க்கும் பொறுப்பை பகிர்ந்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சப்-கலெக்டர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதும், இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, நான்கு வழி சாலை பணி நிறைவடைந்த நிலையில், மரம் வளர்க்கும் திட்டத்தை, அதிகாரிகளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் செயல்படுத்தாமல் மவுனமாக உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X