பாதையில் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை இடைவிடாது பெய்வதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான சின்னக்கல்லாறு, சின்கோனா ரயான், அக்காமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.எஸ்டேட் பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில், நிலவும் கடும்
 பாதையில் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

வால்பாறை:வால்பாறையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை இடைவிடாது பெய்வதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான சின்னக்கல்லாறு, சின்கோனா ரயான், அக்காமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.எஸ்டேட் பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில், நிலவும் கடும் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 144.32 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,300 கனஅடி தண்ணீர் வரத்தும், 830 கனஅடி தண்ணீர் வெளியேற்றமும் இருந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 43, சோலையாறு - 25, மேல்நீராறு - 75, கீழ்நீராறு - 45, பரம்பிக்குளம் - 47, ஆழியாறு - 3, மேல்ஆழியாறு - 7, காடம்பாறை - 12, நவமலை - 7, வேட்டைக்காரன்புதுார் - 5.4, துாணக்கடவு - 14, பெருவாரிப்பள்ளம் - 17, சர்க்கார்பதி - 9, பொள்ளாச்சி - 2, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X