மழை கால பாதிப்புகள் தவிர்க்க ரோடுகளில் மேம்பாட்டு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை கால பாதிப்புகள் தவிர்க்க ரோடுகளில் மேம்பாட்டு பணி

Added : ஜூலை 20, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, வால்பாறை ரோட்டில், மழைக்காலத்தில் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக வால்பாறை உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ளது.இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு
 மழை கால பாதிப்புகள் தவிர்க்க ரோடுகளில் மேம்பாட்டு பணி

ஆனைமலை:பொள்ளாச்சி, வால்பாறை ரோட்டில், மழைக்காலத்தில் சேதம் ஏற்படுவதை தவிர்க்க, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக வால்பாறை உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ளது.இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வால்பாறை வருகின்றனர். ஆண்டுதோறும் மழை காலத்தில் வால்பாறை ரோட்டில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து, தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்.தற்போது, மழை காலம் துவங்கியுள்ளதால், வால்பாறை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ரோட்டோரத்தில் புதர்கள் அகற்றி, ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றி வருகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சிவராஜ் கூறியதாவது:ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து வால்பாறை வரையில், 180க்கும் மேற்பட்ட வடிகால்கள் உள்ளன. வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் ரோட்டில் மழைநீர் வழிந்தோடுவதை தவிர்க்க, வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. சாய்ந்து விழும் நிலையிலுள்ள மரங்களை அகற்றி, புதர்கள் சுத்தம் செய்கிறோம். தேவைப்படும் இடங்களில் தடுப்பு மற்றும் தாங்கு சுவர்கள் அமைத்து, மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X