பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் ரயில்பாதை மின்மயமாக்கும் பணி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:திண்டுக்கல்-பாலக்காடு ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், பணிகள் தீவிரமாக நடக்கிறது.திண்டுக்கல்-பாலக்காடு ரயில்பாதை, அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட பிறகு, பழநி, உடுமலை, பொள்ளாச்சிக்கு, கூடுதல் ரயில்சேவை உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள், ரயில் பயணிகளிடையே ஏற்பட்டது.அதே போல், பிற கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, ரயில் பயணிகள்
 திண்டுக்கல் ரயில்பாதை மின்மயமாக்கும் பணி

உடுமலை:திண்டுக்கல்-பாலக்காடு ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், பணிகள் தீவிரமாக நடக்கிறது.திண்டுக்கல்-பாலக்காடு ரயில்பாதை, அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்ட பிறகு, பழநி, உடுமலை, பொள்ளாச்சிக்கு, கூடுதல் ரயில்சேவை உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள், ரயில் பயணிகளிடையே ஏற்பட்டது.அதே போல், பிற கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, ரயில் பயணிகள் சார்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அவ்வகையில், திண்டுக்கல் முதல் பாலக்காடு வரையிலான, 179 கி.மீ., தொலைவுக்கு, ரயில்பாதையை மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் பணிகள் கடந்தாண்டு துவங்கியது.தற்போது, உடுமலை பகுதியில், மின்மயமாக்கலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றால், அகல ரயில்பாதையில், கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X