பொது செய்தி

தமிழ்நாடு

அதிவிரைவு சாலை திட்டம்: மேம்பால பணி தீவிரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ரோட்டை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி -- திண்டுக்கல் இடையே, 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழி அதிவிரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகள், கடந்த, 2018ல், மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது.இத்திட்டத்தில்,
 அதிவிரைவு சாலை திட்டம்: மேம்பால பணி தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - திண்டுக்கல் அதிவிரைவு சாலை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ரோட்டை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி -- திண்டுக்கல் இடையே, 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழி அதிவிரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகள், கடந்த, 2018ல், மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது.இத்திட்டத்தில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு நான்கு வழி அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்கும் வகையில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.பழநி சண்முகநதி மற்றும் அமராவதி ஆறுகளை கடக்க, இரண்டு உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன.அதில், நான்கு வழிச்சாலையில், கிராம சாலைகள் குறுக்கிடும் இடங்களில், மேம்பாலங்கள் அமைத்து, போக்குவரத்து குறுக்கீடு, விபத்து அபாயங்களை தவிர்க்கும் வகையில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.அவற்றில் ஒரு பாலம், நல்லாம்பள்ளி பிரிவில் அமைக்கப்படுகிறது. இதற்காக, ஏற்கனவே இருந்த நல்லாம்பள்ளி ரோட்டை சிறிது திசை மாற்றி, மேம்பாலத்துக்கான துாண்கள் அமைக்கும் கட்டுமான பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X