பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு 4,107 மாணவர்கள் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பில், மாணவ, மாணவியர் 4,107 பேர், தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவரவர் தனது மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.பிளஸ் 2 ரிசல்ட் நேற்று, இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், 37 பள்ளிகளில், 1,750 மாணவர்கள், 2,357 மாணவியர் என, 4,107பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள்

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பில், மாணவ, மாணவியர் 4,107 பேர், தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவரவர் தனது மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.பிளஸ் 2 ரிசல்ட் நேற்று, இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், 37 பள்ளிகளில், 1,750 மாணவர்கள், 2,357 மாணவியர் என, 4,107பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத் தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.இறுதி மதிப்பெண்கள் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவ, மாணவியர் குறிப்பிட்ட இணையதளங்களில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து வருகின்றனர்.தவிர, பள்ளிகள் வாயிலாக உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மதிப்பெண் விவரம் தெரிவிக்கவும், பட்டியல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும், 22ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X