பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் நோய்த்தடுப்பு பணிகள்: ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், கிராமங்களில், கொசு ஒழிப்பு பணிகளை, துவக்கி, நோய்ப்பரவலை தடுக்க ஒன்றிய நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில், தேங்கும் நன்னீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும், கொசுக்கள்

உடுமலை:பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், கிராமங்களில், கொசு ஒழிப்பு பணிகளை, துவக்கி, நோய்ப்பரவலை தடுக்க ஒன்றிய நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில், தேங்கும் நன்னீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும், கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.கொரோனா தொற்றுப்பரவல் தீவிரமாக இருந்த போது, கிராமங்களில், கிருமிநாசினி தெளிப்பு உட்பட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது, இத்தகைய பணிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பருவமழை காலத்தில், நோய்த்தாக்குதல் பரவும் வாய்ப்புள்ளது.எனவே, கிராமம்தோறும், சிறப்பு முகாம் நடத்தி, கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும், இப்பணிகளுக்காக சிறப்பு மஸ்துார் பணியாளர்கள் நியமிப்பது வழக்கம்.நடப்பாண்டும் தற்போதைய மழை சீசனில், சிறப்பு பணியாளர்களை நியமித்தும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களையும், சுகாதாரப்பணிகளில் ஈடுபடுத்த மக்கள், ஒன்றிய நிர்வாகத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.இதற்கான விழிப்புணர்வையும், சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ள, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X