பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் தண்டவாளத்தில் 'டைம் பாஸ்': ஆபத்தை உணராத இளைஞர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;ரயில் தண்டவாளத்தை பொழுது போக்கும் இடமாக பயன்படுத்துவது, பெரிய அபாயத்தில் முடியும், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொள்ளாச்சி சந்திப்பில் இருந்து, போத்தனுார், திண்டுக்கல், பாலக்காடு பகுதிகளை இணைக்கும் ரயில் வழித்தடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தற்போது மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு முதல், போத்தனுார் வழித்தடத்தில் ரயில்கள்
 ரயில் தண்டவாளத்தில் 'டைம் பாஸ்': ஆபத்தை உணராத இளைஞர்கள்

பொள்ளாச்சி;ரயில் தண்டவாளத்தை பொழுது போக்கும் இடமாக பயன்படுத்துவது, பெரிய அபாயத்தில் முடியும், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொள்ளாச்சி சந்திப்பில் இருந்து, போத்தனுார், திண்டுக்கல், பாலக்காடு பகுதிகளை இணைக்கும் ரயில் வழித்தடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தற்போது மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு முதல், போத்தனுார் வழித்தடத்தில் ரயில்கள் இயங்குவதில்லை.பாலக்காடு - பொள்ளாச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்குகின்றன.இந்நிலையில், ரயில்கள் இயங்குவதில்லை என்ற தைரியத்தில், போத்தனுார் வழித்தட தண்டவாளத்தை விளையாடும் இடமாகவும், நண்பர்களுடன் சேர்ந்து பொழுது போக்கும் இடமாகவும் சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக, கொரோனா பரவலால், பள்ளி, கல்லுாரிகள் வழக்கமான முறையில் இயங்காமல், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடப்பதால், தண்டவாளத்தில் இளைஞர்கள் பொழுது போக்குவது அதிகரித்துள்ளது.ரயில் வழித்தடத்தின் அருகில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், இச்செயலில் ஈடுபடுகின்றனர். ஆனால், மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் சூழலில் இருப்பதால், சோதனைக்காக எப்போது வேண்டுமானாலும், மின் வினியோகம் துவங்கும். சோதனை ரயில் ஓட்டும் நடத்தப்படும் என்பதால், தண்டவாளத்தின் அருகே செல்வது பெரிய அபாயத்தை ஏற்படுத்தும், என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.மேலும், ரயில் வழித்தடத்தில் அத்துமீறி பிரவேசிப்பது தண்டைக்குரிய குற்றம் எனவும், தண்டவாளத்தில் நடமாடும் போது பிடிபட்டால், கைது செய்யவும், அபராதம் விதிக்கவும் ரயில்வே சட்டத்தில் இடமுள்ளது, என, ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X