பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு அகலப்படுத்தும் பணி மாற்றுப்பாதையில் தீவிரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை--வேடபட்டி இணைப்பு ரோடு அகலம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.துங்காவியிலிருந்து கழுகரை வரை, எட்டு கி.மீ., நீளத்தில் மாநில சாலை உள்ளது. மலையாண்டிபட்டினம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதுார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும், உடுமலை -தாராபுரம் வழித்தடத்தில் இருந்து, மடத்துக்குளத்துக்கு வரும் பயணிகளும், இந்த ரோட்டை
 ரோடு அகலப்படுத்தும் பணி மாற்றுப்பாதையில் தீவிரம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை--வேடபட்டி இணைப்பு ரோடு அகலம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.துங்காவியிலிருந்து கழுகரை வரை, எட்டு கி.மீ., நீளத்தில் மாநில சாலை உள்ளது. மலையாண்டிபட்டினம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதுார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும், உடுமலை -தாராபுரம் வழித்தடத்தில் இருந்து, மடத்துக்குளத்துக்கு வரும் பயணிகளும், இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது, உடுமலை, தாராபுரம் மற்றும் இதர பகுதிகளுக்குச்செல்ல, இந்த ரோடு மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.தினமும் பல நுாறு வாகனங்கள் பயன்படுத்தும் இந்த ரோடு, 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கும், வாகனப்பயன்பாட்டுக்கும் தகுந்தபடி அமைக்கப்பட்டது. தற்போது, போக்குவரத்து அதிகரித்த நிலையில், இந்த ரோட்டை அகலப்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு துங்காவியிலிருந்து வேடபட்டி வரை, தேவையான இடங்களில் ரோடு அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது. தற்போது, வேடபட்டி நால் ரோட்டிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கழுகரை வரை ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோட்டின் ஓரம் நிலம் தோண்டப்பட்டு, கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X