இந்தியா

தனித்தனி ஆலோசனை கூட்டம் : அமரீந்தர் - சித்து மோதல் தீவிரம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
அமிர்தசரஸ்: பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால், உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தருக்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள்
தனித்தனி ஆலோசனை,அமரீந்தர்   சித்து மோதல் தீவிரம்

அமிர்தசரஸ்: பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால், உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தருக்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, நேற்று முன்தினம் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி சித்து நியமிக்கப்பட்டது, இந்த பிரச்னையை மேலும் தீவிரமடைய வைத்துள்ளது.அமரீந்தரும், சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்; இருவரும் நேற்று தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.
முதல்வர் அமரீந்தர் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில், சட்டசபை சபாநாயகர் ராணா, அமைச்சர்கள் பல்பிர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், பிராம் மஹிந்திரா உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள்
பங்கேற்றனர்.அமைச்சர் திரிபத் ரஜிந்தர் சிங் பாஜ்வா இல்லத்தில், நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் பாஜ்வா மட்டுமின்றி, அமைச்சர்கள் சரண்ஜித் சன்னி, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இதனால், பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது; இது, காங்., மேலிடத்துக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-ஜூலை-202111:53:54 IST Report Abuse
elakkumanan ஏம்பா, இந்த மாநிலத்துலயும் கான் கிராஸ் கம்பெனி மூடியாச்சு... முதலாளியே கடைக்கு பூட்டு போட ஏற்பாடு செஞ்சிட்டாரு... நல்ல முதலாளி... ராவுளு தகுதிக்கு பூட்டு வாங்கி கொடுப்பது மற்றும் தீயா பிரச்சாரம் பண்ணி கேவலமா தோக்குறது மட்டும்தான் முடியும்.. இந்த ஆளை, பிரதம வேட்பாளர் ன்னு சொன்ன மனிதர், எம்பூட்டு பெரிய அறிவாளி.. இந்த ஆளை வேறெந்த நபரும் (சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி ) பிரதம வேட்பாளர் ன்னு இதுவரை யாருமே சொல்லலை... இப்போ சொல்லுங்க, எங்க அறிவு எப்புடி... டுமீல் குப்பம், அதுக்கும் ஒட்டு போடுது....எந்த ஊரிலும் விற்காத, விற்பனையே ஆகாத பொருளை, விற்கவே முடியாத பொருளை, அடிச்சு பிடிச்சு வாங்கிய டுமீல் குப்பம் கூட அறிவு கொழுந்து நிறைந்த மாநிலம்தானே..அதுனாலதான், நீட் மற்றும் போட்டி தேர்வுகள் எதுவுமே வேண்டாம் னு சாகுறோம்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-ஜூலை-202110:20:52 IST Report Abuse
duruvasar ராகுலின் ஸ்லீப்பர் செல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது.
Rate this:
Cancel
Nellai Ravi - Nellai,இந்தியா
20-ஜூலை-202108:08:20 IST Report Abuse
Nellai Ravi வெளியே வாருங்கள், தனி கட்சி காணுங்கள், மக்கள் உங்கள் துணை நிற்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X