தனித்தனி ஆலோசனை கூட்டம் : அமரீந்தர் - சித்து மோதல் தீவிரம்| Dinamalar

இந்தியா

தனித்தனி ஆலோசனை கூட்டம் : அமரீந்தர் - சித்து மோதல் தீவிரம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (5)
Share
அமிர்தசரஸ்: பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால், உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தருக்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள்
தனித்தனி ஆலோசனை,அமரீந்தர்   சித்து மோதல் தீவிரம்

அமிர்தசரஸ்: பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால், உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தருக்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, நேற்று முன்தினம் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி சித்து நியமிக்கப்பட்டது, இந்த பிரச்னையை மேலும் தீவிரமடைய வைத்துள்ளது.அமரீந்தரும், சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்; இருவரும் நேற்று தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.
முதல்வர் அமரீந்தர் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில், சட்டசபை சபாநாயகர் ராணா, அமைச்சர்கள் பல்பிர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், பிராம் மஹிந்திரா உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள்
பங்கேற்றனர்.அமைச்சர் திரிபத் ரஜிந்தர் சிங் பாஜ்வா இல்லத்தில், நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் பாஜ்வா மட்டுமின்றி, அமைச்சர்கள் சரண்ஜித் சன்னி, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இதனால், பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது; இது, காங்., மேலிடத்துக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X