பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தாக்குதலிலிருந்து தென்னையை காப்பது எப்படி? விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை;பரவலாக மழை பெய்து வருவதால், தென்னை மரங்களுக்கு தகுந்த உரம் இடுவதன் வாயிலாக, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என, வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், இலைக்கருகல் நோய், தென்னை விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.இதன் தாக்கம் மழை காலத்தில் குறைவாக

உடுமலை;பரவலாக மழை பெய்து வருவதால், தென்னை மரங்களுக்கு தகுந்த உரம் இடுவதன் வாயிலாக, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என, வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், இலைக்கருகல் நோய், தென்னை விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.இதன் தாக்கம் மழை காலத்தில் குறைவாக இருந்தாலும், வெயில் காலம் துவங்கியவுடன் அதிகரிக்கிறது.இந்நோய் தாக்கிய தென்னை மரங்களின் இலைகள் சுருங்கி கருகி விடும். மரங்களின் ஒளிச்சேர்க்கை திறனும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, மரங்களின் மகசூல் கடுமையாக பாதிக்கிறது.தற்போது, உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், தகுந்த உரம் இடுவதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேளாண்துறையினர் கூறியதாவது:ஒவ்வொரு மரத்திற்கும் ஆண்டிற்கு, 200 கிராம் 'சூடோமோனோஸ்' மற்றும், 200 கிராம் 'டிரைகோடெர்மா' ஆகியவற்றை தொழு உரத்துடன் கலந்து வைக்க வேண்டும். இதனை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாதியாக பிரித்தும் கொடுக்கலாம்.ஆனால், ரசாயன உரங்களுடன் கலந்து கொடுக்கக்கூடாது. இவ்வழிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடித்தால், இலைக்கருகல் உள்ளிட்ட நோய்த்தாக்குதல்களில் இருந்து மரங்களை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X