கொப்பரை ஆதார விலை ரூ. 150 எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஆதார விலை ரூ. 150 எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
பொள்ளாச்சி;தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வந்து, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க, கொப்பரை கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையில், ஒவ்வொரு மாதமும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் தேங்காய் சீசன் உச்சத்தில் உள்ள நிலையில்,
 கொப்பரை ஆதார விலை ரூ. 150 எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி;தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வந்து, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க, கொப்பரை கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையில், ஒவ்வொரு மாதமும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் தேங்காய் சீசன் உச்சத்தில் உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் இருந்தும் காங்கேயத்துக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.இதுதவிர, தேங்காய் பவுடர் விலை சரிந்ததால், கர்நாடகாவில் உற்பத்தியாகும் பந்து கொப்பரைகள் பொள்ளாச்சி, நெகமம் பகுதிக்கு உடைப்பு மற்றும் எண்ணெய் உற்பத்திக்கு கொண்டு வரப்படுகின்றன.ஆடி மாதம் என்பதால், வடமாநிலங்களில் தேங்காய், கொப்பரை மற்றும் ஆயிலுக்கு வரவேற்பு இல்லை. இதனால், அப்பகுதியில் கொள்முதல் செய்வது வெகுவாக குறைந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, காங்கேயம் மார்க்கெட்டில் சாதாரண ரக கொப்பரை கிலோ - 97, ஸ்பெஷல் ரக கொப்பரை - 100, தேங்காய் பவுடர் கிலோ - 145, ஆயில் (15 கிலோ) டின் - 2,250, தேங்காய் பச்சை ரகம் டன் - 28,500, கருப்பு ரக தேங்காய் - 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.தென்னை சாகுபடியாளர்கள் கடந்த மூன்று முறை அறுவடை செய்த தேங்காய்களை விலையில்லாததால், தோப்புகளில் இருப்பு வைத்துள்ளனர். அதேபோல, வியாபாரிகளும் கொள்முதல் செய்த தேங்காய்களை குவித்துள்ளனர்.ஆடி பெருக்கு மற்றும் மழையால் விடுமுறை என்பதால், கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதன் காரணமாகவும், தேங்காய் மற்றும் கொப்பரை விலை மேலும் சரிய துவங்கியுள்ளது.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு கூறியதாவது:சரிந்து வரும் தேங்காய், கொப்பரை விலையை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, 103.35 ரூபாயை, 150 ரூபாயாக உயர்த்த வேண்டும்.உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், ஆதார விலையை கட்டாயம் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அல்லது தமிழக அரசு, கொப்பரை உற்பத்தியாளர் நலன் கருதி, கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X