பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் குறைந்தது வெள்ளை ஈ தாக்கம்! முழுவதும் கட்டுப்படுத்த அறிவுரை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் பருவமழைக்கு கட்டுப்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்குதலை மேலும் கட்டுப்படுத்த, தோப்பில் எதிர் உயிரிகளை அதிகரிக்க வேண்டும், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதி தென்னந்தோப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளை ஈ தாக்குதல், தொடர் மழைக்கு ஓரளவு குறைந்துள்ளது. இருந்தாலும், 30 சதவீத தோப்புகளில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் பருவமழைக்கு கட்டுப்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்குதலை மேலும் கட்டுப்படுத்த, தோப்பில் எதிர் உயிரிகளை அதிகரிக்க வேண்டும், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதி தென்னந்தோப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளை ஈ தாக்குதல், தொடர் மழைக்கு ஓரளவு குறைந்துள்ளது. இருந்தாலும், 30 சதவீத தோப்புகளில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.மழையால் வெள்ளை ஈக்களால் பாதிப்பு குறைந்த நிலையில், எதிர் உயிரிகளை அதிகரித்தால், நல்ல பலன் கிடைக்கும், என, வேளாண் துறை கூறியுள்ளது.வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளில் முட்டையிட்டு பெருக்கமடைகின்றன. ஈக்கள் மற்றும் குஞ்சுகள் வெளியிடும் திரவம், ஓலையில் மெழுகு போல் படர்ந்து விடுவதால், தென்னை மரம் சூரிய ஒளியை கிரகித்து, பச்சையம் தயாரிப்பது தடைபடுகிறது.இதனால், தீயால் கருகியது போல் தென்னை ஓலைகள் கருமையாக தோற்றமளிக்கிறது. இதனால், குரும்பல் உதிர்ந்து, தேங்காய் மசூசூல் பாதிக்கிறது.வெள்ளை ஈ தாக்குதலுக்கு ரசாயன மருந்துகளை பயன்படுத்தினால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். மாற்றாக, வெள்ளை ஈக்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை உணவாக உட்கொள்ளும் எதிர் உயிரிகளை பெருகச் செய்து கட்டுப்படுத்தலாம்.வெள்ளை ஈக்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு அழிக்கும் கிரைசோபா உயிரியின் முட்டைகள் ஒரு ெஹக்டேருக்கு, ஆயிரம் என்ற எண்ணிக்கையில், தோப்பின் நான்கு திசைகளிலும் தென்னை மரத்தின் ஓலைகளில் 'பின்' செய்ய வேண்டும்.முட்டைகளில் இருந்து வெளிப்படும் கிரைசோபா உயிரி, தோப்பில் பல்கிப் பெருகி, வெள்ளை ஈக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தும்.கிரைசோபா முட்டைகள், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.இதே போல், வெள்ளை ஈக்களின் முட்டைகளை உண்டு அழிக்கும் என்கார்சியா உயிரிகளை, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறலாம்.பருவநிலை மாறுவதற்குள், எதிர் உயிரிகளை தோப்பில் அதிகரித்து, வெள்ளை ஈக்கள் ஆதிக்கத்தை குறைக்க விவசாயிகள் தீவிரம் காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X