பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையில் குப்பை அகற்றம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:எரிசனம்பட்டி அருகே ஓடையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.உடுமலை அடுத்த எரிசனம்பட்டி ஊராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ளன. சுற்றுப்பகுதியில் சேகரமாகும் குப்பை, பில்லவநாயக்கன்சாலையூர் நன்னீர் ஓடையில் கொட்டப்படுகிறது. குப்பை மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்

உடுமலை:எரிசனம்பட்டி அருகே ஓடையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.உடுமலை அடுத்த எரிசனம்பட்டி ஊராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ளன. சுற்றுப்பகுதியில் சேகரமாகும் குப்பை, பில்லவநாயக்கன்சாலையூர் நன்னீர் ஓடையில் கொட்டப்படுகிறது. குப்பை மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அவை மழையால் ஏற்படும் நீர் ஓட்டத்தை தடுப்பதாகவும், சுற்றுப்பகுதி நிலத்தடி நீரை மாசடையச் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தவிர, சுகாதார பாதிப்பு ஏற்படுவதால், ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து ஊராட்சித்தலைவர் பாரதி கூறுகையில், ''தற்போது, பொக்லைன் இயந்திரம் வாயிலாக குப்பையை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மழையின் காரணமாக, தண்ணீர் தேங்கி நிற்பதால், பணிகள் காலதாமதமாகி வருகிறது. ஓடையில் உள்ள குப்பை முழுமையாக அகற்றப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X