பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மானியம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி அறிக்கை:காய்கறி பயிர்கள், பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவபயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் இதர

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி அறிக்கை:காய்கறி பயிர்கள், பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவபயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கும்; இதர, விவசாயிகளுக்கு,12.5 ஏக்கர் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.சொட்டு நீர் பாசன குழாய் அமைப்பதற்கு குழி தோண்ட, ஒரு ஏக்கருக்கு, 1,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், சொட்டு நீர் பாசனம் அமைத்த பயனாளிகளுக்கு, துணைநிலை நீர் சேமிப்பு திட்டம் கீழ், மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, 50 சதவீதம் மானியம் அனுமதிக்கப்படுகிறது.திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விளைநிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் சிறு, குறு விவசாய சான்று, மூன்று பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, 95850 98230, 99655 62700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X