பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய பிரதான ரோடுகள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நகரின் புற நகர பகுதியான, உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில், கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது.ரோட்டின் இரு புறமும், மலைபோல் காணப்படும் கழிவுகளால், ரோட்டின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. அதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளுக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்பட்டு,

உடுமலை:உடுமலை நகரின் புற நகர பகுதியான, உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில், கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது.ரோட்டின் இரு புறமும், மலைபோல் காணப்படும் கழிவுகளால், ரோட்டின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. அதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளுக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்பட்டு, விபத்துக்களும் ஏற்படுகிறது.அதே போல், தாராபுரம் ரோட்டில், புற நகர பகுதியில், இரு புறமும், பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடிக்கழிவுகள், அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து, பஞ்சு மற்றும் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுகிறது.தளி ரோட்டில், போடிபட்டியிலிருந்து, மூணாறு, திருமூர்த்திமலை செல்லும் ரோடுகளின் ஓரத்தில், ரோட்டோரங்கள் மற்றும் மழை நீர் ஓடைகளை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்படுகிறது.எனவே, ரோட்டோரங்களில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், அத்துமீறி கழிவுகளை கொண்டு வந்து குவிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X